பங்குச்சந்தையில் ரூ.5,072 கோடி முதலீடு

புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இந்த மாதம் இதுவரை ₹5,072 கோடி முதலீடு செய்துள்ளனர்.  வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முதலீட்டை வாபஸ் பெற்றனர். ஆனால், கடந்த மாதம் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் ₹6,557.8 கோடி நிகர முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மாதம் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை பங்குச்சந்தையில் ₹4,970 கோடியும், கடன் பத்திரங்களில் ₹102 கோடியும் முதலீடு செய்துள்ளனர்.

இதன்படி நிகர முதலீடு ₹5,072 கோடியாக உள்ளது. ஆனால், கடந்த 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை நிகர முதலீடு ₹6,217.1 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக்கொண்டனர்.  பெரிய நிறுவனங்களுக்கான வரிகள் தள்ளுபடி, பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் போன்ற மத்திய அரசு முடிவுகளாலும், சீனா, அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை, பிரெக்சிட் ஆகியவை தொடர்பான சாதகமான நிலவரங்கள் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளன என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: