விஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் குஜராத்: டெல்லி ஏமாற்றம்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் விளையாட குஜராத் அணி தகுதி பெற்றது.ஜஸ்ட் கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நேற்று நடந்த கால் இறுதியில் குஜராத் - டெல்லி அணிகள் மோதின. டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. டெல்லி அணி 49 ஓவரில் 223 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் துருவ் ஷோரி அதிகபட்சமாக 91 ரன் (109 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

Advertising
Advertising

நிதிஷ் ராணா 33, ஹிம்மத் சிங் 26, லலித் யாதவ் 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். குஜராத் பந்துவீச்சில் சிந்தன் கஜா, அர்ஸன் நக்க்வஸ்வாலா தலா 3, பியுஷ் சாவ்லா 2, ரூஷ் களரியா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது..

கேப்டன் பார்திவ் பட்டேல் - பிரியங்க் பாஞ்ச்சால் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23 ஓவரில் 150 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. இருவரும் அரை சதம் விளாசினர். பார்திவ் 76 ரன் (60 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), பாஞ்ச்சால் 80 ரன் (91 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். மெராய் 5, ஜுனேஜா 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 37.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. துருவ் ராவல் 34, அக்சர் பட்டேல் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற குஜராத் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

Related Stories: