×

உள்ளூர் சராசரி 99.84

சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்து அசத்தி வரும் ரோகித் ஷர்மாவின் சராசரி 99.84 ஆக உள்ளது. 10+ இன்னிங்சில் மிகச் சிறந்த உள்ளூர் சராசரியாக இது அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மகத்தான வீரரான டான் பிராட்மேனின் உள்ளூர் சராசரி 98.22 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவில் கடைசியாக விளையாடிய 9 இன்னிங்சில் ரோகித்தின் ரன் குவிப்பு விவரம்: 82*, 51*, 102*, 65, 50*, 176, 127, 14, 212.
* நடப்பு தொடரில் ரோகித் இதுவரை 529 ரன் குவித்துள்ளார். 2005ல் பாகிஸ்தானுக்கு எதிராக சேவக் 544 ரன் குவித்திருந்தார். அதன் பிறகு அதிக ரன் குவித்த இந்திய தொடக்க வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது.
* ஒரு டெஸ்ட் தொடரில் 500+ ரன் எடுக்கும் 5வது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையையும் ரோகித் வசப்படுத்தி உள்ளார். முன்னதாக சுனில் கவாஸ்கர் (5 முறை), விணு மன்கட், பூதி குந்தரன், சேவக் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
* 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோஹ்லி (5 இன்னிங்சில் 610 ரன்), சேவக் (6 இன்னிங்சில் 544 ரன்), கங்குலி (6 இன்னிங்சில் 534 ரன்) ஆகியோரை அடுத்து ரோகித்துக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. வி.வி.எஸ்.லஷ்மண் (6 இன்னிங்சில் 503 ரன்) 5வது இடத்தில் உள்ளார்.

Tags : The local,average, is, 99.84
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்துவதில்...