×

ரயில்வே வாரிய அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்க முடிவு: செயல் திறனை அதிகரிக்க நடவடிக்கை

புதுடெல்லி: ரயில்வே வாரிய அதிகாரிகளின் எண்ணிக்கையை 200ல் இருந்து 150 ஆக குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ரயில்வே வாரியத்தின் பல்வேறு உயர் பதவிகளில் சுமார் 200 அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த வாரியத்தில் தேவையான எண்ணிக்கைக்கு அதிகாரிகளை குறைத்து, மீதமுள்ளவர்களை வெவ்வேறு பணியில் மாற்ற கடந்த 2000ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் இந்த முயற்சி நிறைவேறவில்லை.

இந்நிலையில், ரயில்வே அமைச்சரின் 100 நாள் திட்டத்தில், ரயில்வே வாரிய அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் படி, தற்போது இயக்குநர் மற்றும் அதற்கு மேலான உயர் பதவிகளில் உள்ள 50 அதிகாரிகள் வெவ்வேறு மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘‘இந்த நடவடிக்கை நீண்ட காலமாக நிறைவேறாமலேயே இருந்து வந்தது. இது ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. இதன் மூலம் 50 அதிகாரிகள், தேவைப்படும் மண்டல ரயில்வே நிர்வாகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்,’ என ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Tags : Railway Board , Railway Board,Officials,Decide, Reduce,Number of Steps
× RELATED தென்மாவட்ட மக்களின் கனவு நிறைவேறியது.....