×

நெய் தேங்காய் என நினைத்து பணப்பொட்டலத்தை ஆழித்தீயில் வீசிய பக்தர்: தீயணைப்பு வீரர்கள் மீட்டுக்கொடுத்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலையில்  18ம் படிக்கு முன் பக்தர்கள் நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழி உள்ளது.  பக்தர்கள் கொண்டுவரும் நெய் தேங்காய்களை இதில் போட்டு செல்வது வழக்கம். நடை  திறக்கும் அன்று முதல் மூடப்படும் வரை ஆழி எரிந்து கொண்டிருக்கும்.     ஆழியில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் வெப்பம் அதிகம்  இருக்கும். இதனால் அதன் அருகில் யாரும் செல்ல முடியாது.இந்த  நிலையில், நேற்று முன்தினம் ஈரோட்டை சேர்ந்த தமிழரசன்(48) என்பவர் தனது மகனுடன்  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்திருந்தார். இரவு தரிசனம் முடித்துவிட்டு  ெநய் தேங்காய் எரிக்க ஆழி அருகே சென்றார். அப்போது தவறுதலாக தன்னிடம்  இருந்த ₹25 ஆயிரம் பணம், ஆதார் கார்டு உட்பட ஆவணங்கள் வைத்திருந்த  பொட்டலத்தை ஆழிக்குள் வீசிவிட்டார்.

அதன் பிறகுதான் நெய் தேங்காய்க்கு  பதிலாக தவறுதலாக பணம் மற்றும் ஆவணங்கள் வைத்திருந்த பொட்டலத்தை வீசியது  தெரியவந்தது. இதையடுத்து அவர் சப்தம் போட்டு கதறி அழுதார். அங்கிருந்த  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விபரத்தை கேட்டனர். அவர்கள் பார்த்தபோது அதிகமாக தீ எரியாத பகுதியில் பண பொட்டலம் கிடந்தது. உடனடியாக  செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்   ஆழிக்குள் இறங்கி பணத்தை மீட்டு தமிழரசனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Firefighters , Devotees , burned , cash box, ghee coconut, Firefighters rescued
× RELATED மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட...