‘குற்றங்களை கட்டுப்படுத்த உ.பி அரசு தவறிவிட்டது’

புதுடெல்லி: உபி குற்றச் சம்பவங்கள் பற்றிய செய்திகள் அடங்கிய போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பகிர்ந்துள்ளார். அதில் இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட செய்தியும் அடங்கியுள்ளது. அந்த போட்டோவில், ‘‘ஒவ்வொரு நாளும் குற்ற சம்பவங்கள். பாஜ அரசு முற்றிலும் தோல்வி’’ என தலைப்பிடப்பட்டுள்ளது. கமலேஷ் திவாரி கொலைக்கான காரணம் குறித்து கருத்து தெரிவித்த உ.பி. டிஜிபி, ‘‘சர்ச்சை கருத்துக்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம்’’ என்றார்.

Advertising
Advertising

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ‘‘உபி.யில் காட்டாட்சி நடக்கிறது என உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது.  நாம் டிஜிபி சொல்வதை நம்ப வேண்டுமா அல்லது உச்ச நீதிமன்றம் சொல்வதை நம்ப வேண்டுமா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: