அமெரிக்காவில் விளம்பர பலகையால் சர்ச்சை அதிபர் டிரம்ப் முகத்தில் மிதிக்கும் பெண் மாடல்

நியூயார்க்: அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவத்தை போன்ற ஒருவர் தரையில் கிடக்கிறார், தடகள போட்டிக்கான உடை அணிந்த பெண் ஒருவர் அவரது முகத்தின் மீது காலால் மிதித்தப்படி உள்ளார். மேலும் அவர் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற கயிறுகளால் அந்த நபரை கட்டிப் போட்டபடி இருக்கிறார். இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டிரம்பின் மகனான ஜூனியர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்த தனது டிவிட்டர் பதிவில், ‘ஊடகங்களே, உங்களுக்கு முட்டாள்தனமான மற்றும் சுவாரசியமில்லாத மீம்ஸ்களை வெளியிடுவதற்கு நேரமிருக்கிறது. டைம்ஸ் சதுக்க விளம்பர பலகை பற்றிய செய்தியை ஊடகங்களில் வெளியிடுவதற்கும் நேரம் ஒதுக்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால், நீங்கள் அனைவரும் வீணர்கள்தான்’ என கூறியுள்ளார்.

Related Stories: