×

விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சையது அப்துல் ரஹீம் (35), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது நலீப் (24) ஆகிய இருவரும்  துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு, சென்னை திரும்பினர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள், சீக்கிரம் சோதனை செய்யுங்கள், நாங்கள் வெளியூருக்கு செல்ல வேண்டும், என அவசரப்பட்டனர். இதனால், அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. அவர்களை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது, அவர்களது உள்ளாடையில் ரகசிய அறை வைக்கப்பட்டு, 950 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ₹38 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Tags : airport , Rs.38 lakh,seized ,airport
× RELATED 2 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான சேவை தொடக்கம்