தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட 6 பேருக்கு குண்டாஸ்

சென்னை: தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர்ந்து    குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.

அதன்படி, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை ‘பி’ பிளாக், பிஷப் லேன் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த சரண்ராஜ் (27), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (42), கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சத்யா (30), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் பாலகணேசன் தெருவை சேர்ந்த மலை மன்னன்(35), திருட்டு, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய முடிச்சூர் லட்சுமி நகர் யோக மாரியம்மன் தெருவை சேர்ந்த ஆனந்தன் (55), போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்த சிவராமன் (48) ஆகிய 6 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>