அரசு மருத்துவமனை லிப்டில்சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி

சென்னை: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை லிப்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படும். பெண்கள் அதிகளில் மருத்துவமனைக்கு வந்து செல்வதால், மருத்துவமனை வளாகத்திலேயே காவல் நிலையம் உள்ளது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அவரை பார்க்க உறவினர் ஒருவர், தனது 8 வயது மகளுடன் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை வந்துள்ளார். மருத்துவனையின் 3வது மாடியில் உறவினர் குழந்தையை பார்த்து விட்டு, இரவு 8.30 மணிக்கு வீட்டிற்கு செல்ல மருத்துவமனை லிப்டில் கீழே இறங்கி உள்ளார்.

அப்போது, லிப்டில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த சிறுமி மற்றும் அவரது தந்தை உதவி கேட்டு அலறினர். லிப்ட் கீழே வந்ததும், அங்கிருந்த பொதுமக்கள், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலைய போலீசார் அங்கு வந்து, போதை வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, காவல்நியைம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் கன்டமாண்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்த கார் டிரைவர் சஞ்சய் காந்தி (37) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கை சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சஞ்சய் காந்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>