தொழில்நுட்பம் பற்றிய பயத்தை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது: பிரதமர் பேச்சு

புதுடெல்லி: ‘‘தொழில்நுட்பம் பற்றி பயத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன’’ என புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார். டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன், அதே நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ரூபா புருஷோத்தமன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பிரிட்ஜிடல் இந்தியா’ என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடந்து. இதில் தொழிலதிபர் ரத்தன் டாடா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தொழில்நுட்பம் பற்றி பயத்தை ஏற்படுத்தி, அச்சுறுத்தலான சூழலை ஏற்படுத்தும்  முயற்சிகள் நாட்டில் நடக்கின்றன. செயற்கை நுண்ணறிவின் அபாயம் பற்றியோ அல்லது ரோபோக்கள் எப்போது மனிதனை மிஞ்சும் என்பது பற்றி விவாதம் இருக்கக் கூடாது.

Advertising
Advertising

செயற்கை நுண்ணறிவுக்கும், மனித எண்ணங்களுக்கும் இடையே எப்படி இணைப்பு பாலத்தை ஏற்படுத்துவது என்பது பற்றி விவாதம்தான் இருக்க வேண்டும். தொழில்நுட்பம் என்பது இணைப்பு பாலம். அது தடுப்பு அல்ல. எல்லோருக்குமான வளர்ச்சியை ஏற்படுத்த தொழில்நுட்பம் என்பது எண்ணங்களுக்கும், சாதனைகளுக்கும் இடையே, தேவைக்கும், வழங்கலுக்கும் இடையே, அரசுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே இணைப்பு பாலத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பத்தால் ஒட்டு மொத்த தபால் துறைக்கும் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் தொழில்நுட்பம் மூலம் தீவிர வங்கி அமைப்பாக மாற்றப்பட்டன. தபால் வங்கி மூலம் லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். தபால்கார்கள் எல்லாம் வங்கியாளர்களாக மாறிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: