தீபாவளி உட்பட பண்டிகைகளால் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை 9-12 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: இந்த தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனையானதைவிட இந்த ஆண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது என்று ரிலையன்ஸ் டிஜிட்டல்  தலைமை செயல் அதிகாரி பிரையன் பாடே தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஸ்மார்ட் போன்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. 7 நாட்கள் உள்ள நிலையில் நுகர்பொருள் விற்பனை சூடுபிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

Advertising
Advertising

கடந்த ஆண்டு தீபாவளியின் நடந்த விற்பனையைவிட இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மும்பையில் முன்னமி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான கோஹினூர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் விஷால் மிவானி தெரிவித்துள்ளார். தீபாவளி சீசனில் பொருட்கள் வாங்கினால் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதாலும் அது தங்களுக்கு நல்லது என்றும் பொதுமக்கள் மனதளவில் நம்பிக்கை வைத்துள்ளதால்தான் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் விஷால் மேலும் தெரிவித்தார்.

இந்த பண்டிகை காலத்தில் சில்லறை விற்பனை 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக கிரேட் ஈஸ்டர்ன் சில்லறை விற்பனை நிறுவனத்தின் இயக்குநர் புல்கிட் பைடு தெரிவித்தார். நுகர்பொருள் விற்பனை கடந்த 2 வாரங்களாக நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. இது மேலும் 2 வாரங்களுக்கு தொடரும் என்பதால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தி தொழில் வளர்ச்சி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த பண்டிகை காலத்தில் நுகர்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. பொருளாதார மந்த நிலையை உணர்த்துவதாக இல்லை.

குளிர்சாதன பொருட்கள் விற்பனை நன்றாகவே உள்ளது என்று ‘ஜான்சன் கன்ட்ரோல்ஸ் - ஹிட்டாச்சி ஏர் கண்டிசனிங் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் குர்மீத் சிங் தெரிவித்தார். பண்டிகை காலம் என்பது ஓணம், நவராத்திரி - துர்கா பூஜை, தசரா, தீபாவளி என்று நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் திருவிழாக்கள் கலைகட்டின. இதனால், இந்த ஆண்டு வீட்டு உபோயகப் பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Related Stories: