ஜொகோர் கோப்பை இந்தியாவுக்கு 2வது இடம்

ஜொகோர் பாரு: மலேசியாவில் நடைபெற்ற ஜொகோர் கோப்பை யு-19 ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய அணி 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. பைனலில் இங்கிலாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இந்திய வீரர் குர்சாகிப்ஜித் சிங் 49வது நிமிடத்தில் கோல் போட்டார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ருஷ்மியர் 50வது மற்றும் 60வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆட்டம் முடிய கடைசி 3 விநாடிகள் இருந்த நிலையில் இங்கிலாந்து கோல் போட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>