விமான நிலையத்தில் ரூ36 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து ஏர்இண்டியா விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், திருச்சியை சேர்ந்த முகமது ஆசின் (24), மதுரையை சேர்ந்த் ஷேக் அப்துல்லா (27) ஆகிய இருவரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று, திரும்பி வந்தனர். சுங்க அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தியபோது, அவர்களின் ஆசனவாயில் 999 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ₹36 லட்சம். அவற்றை சுங்க அதிகாரிகள்  பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: