ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூவரசன்பட்டு ஊராட்சியில் சுமார் 150 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரி ஆக்ரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி பாதியாக சுருங்கி உள்ளது. மேலும், பல ஆண்டுகளாக இந்த ஏரியில் குப்பை கொட்டப்பட்டும், பல்லாவரம் மற்றும் திரிசூலம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த ஏரியில் விடப்பட்டும் வந்தது. இந்நிலையில், இந்த ஏரியில் குப்பை மற்றும் கழிவுநீர் விடப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் சேகரிக்க கோரியும் ஆலந்தூரை சேர்ந்த இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் சங்கரகோமதி, மின்வாரிய உதவி பொறியாளர் காந்த் மற்றும் அதிகாரிகள் நேற்று போலீசாருடன் அங்கு சென்று, ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20 வீடுகளின் மின் இணைப்பை துண்டித்தனர்.

Related Stories: