கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

திருமலை: ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நண்பர்கள் 11 பேர் 2 கார்களில் சூர்யாபேட்டையில் நடைபெற்ற மகேஷ் என்பவரின் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்துக்கு வந்தனர். கக்கிராலா பாலம் அருகே வந்தபோது ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கால்வாய்க்குள் பாய்ந்தது. நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது மற்றொரு காரில் வந்துகொண்டிருந்த 5 நண்பர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக சூர்யாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தேடும் பணி மந்தமாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் தேடும் பணி நடந்தது. இதில் 15 மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகு கால்வாயில்  அடித்துச் செல்லப்பட்ட செகந்திராபாத்தை சேர்ந்த அப்துல்,  ராஜேஷ், சந்தோஷ், ஜான்சன், நரேஷ், பவன்ஆகிய 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

Related Stories: