‘காப்பி’ அடிப்பதை தடுக்க கொடூர யுக்தி மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் காலம் காலமாகவே ஆசியர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்னைகளில் ஒன்று தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதுதான். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரி, மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒரு புதிய கொடூரமான யுக்தியை பின்பற்றியது. அதாவது, மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க, தலையில் அட்டைப்பெட்டியை மாட்டிவிட்டு தேர்வு எழுதும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ஹவேரி மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலை ஒன்றில் நடக்கும் செமஸ்டர் தேர்வில், முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்கவும் மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியை மாட்டிவிட்டு தேர்வு எழுத வைத்துள்ளதாக, அந்த வீடியோவில் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை மாணவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, கல்லூரிக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories: