விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரசாரம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டி, கஞ்சனூர், கெடார், காணை ஆகிய இடங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வேனில் உட்கார்ந்தபடி பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், அதிமுக, வேட்பாளருக்கு வாக்களியுங்கள், அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என இரட்டை விரலை காட்டியபடியே பேசினார். விஜயகாந்த் பேசியது பலருக்கும் புரியவில்லை. பல இடங்களில் இரட்டை விரலை மட்டும் காண்பித்தார். ஒருசில வார்த்தைகளும் சுத்தமாக புரியவில்லை. பிரசார வேனில் வேட்பாளர் முத்தமிழ் செல்வன், அமைச்சர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: