காதல்ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்து பலாத்காரம்: முகமூடி கும்பல் தலைவன் கைது

தஞ்சை: தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து பள்ளியக்ரகாரம் வரை உள்ள சுற்றுச்சாலையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், காதல்ஜோடிகளை முகமூடி கொள்ளையர்கள் மிரட்டி பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைளை பறித்து உள்ளனர். இது குறித்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், சந்தேகத்திற்கிடமாக டூ வீலரில் வந்த ஒருவரை மடக்கி சோதனை நடத்தியதில், திருட்டு டூ வீலர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்தபோது, முகமூடி கொள்ளை கும்பலுக்கு தலைவன் என தெரியவந்தது.

தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (28) என்பதும், இவருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பேர் இந்த செயலில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுபட்டு வந்துள்ளனர். காதல் ஜோடி, கல்லூரி மாணவிகள் தனியாக வந்தால் அவர்களை ரோட்டு ஓரம் இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று பணம், நகைகளை பறித்து மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் தெரிய வந்தது. இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories:

>