ஆன்லைனில் வில்லங்கசான்று பெறும் திட்டத்தில் மாற்றமா?... பதிவுத்துறை ஐஜி விளக்கம்

சென்னை: ஆன்லைனில் வில்லங்கசான்று பெறும் திட்டத்தில் மாற்றம் செய்யப்படுமா என்பது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைனில் வில்லங்கசான்று பெறும் திட்டத்ைத கடந்தாண்டு டிசம்பர் முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஆன்லைனில் எங்கிருந்து வேண்டுமானாலும் வில்லங்கசான்று பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஆன்லைனில் பொதுமக்களே நேரடியாக வில்லங்க சான்று பெறுவது என்பது மிகவும் குறைவு தான். அவர்கள் ஆவண எழுத்தரை தான் அணுகி வில்லங்க சான்று பெற விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. எனவே, கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியிடாததை பயன்படுத்தி கொண்டு தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற்போல் இடைதரகர்கள் கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, 1 ஆண்டுக்கு பார்க்க வேண்டுமென்றால் ரூ141க்கு பதில் ரூ500ம், 32 ஆண்டுகளுக்கு ரூ440க்கு பதில் ரூ2 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாவை சந்தித்த சார்பதிவாளர்கள் இது தொடர்பாக புகார் அளித்தனர். இது தொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த அக்டோபர் 3ம் தேதி செய்தி வெளியானது. இந்த செய்திக்கு தற்போது பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அதில், ஸ்டார் 2.0 திட்டத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் காலத்திற்கு றே்ப மென்ெபாருளால் வில்லங்கத்திற்கான உரிய கட்டணம் காட்டப்படும். அந்த கட்டத்தில் மட்டும் இணையத்தின் வழியாக பொதுமக்கள் செலுத்தினால் போதுமானது.

பொதுமக்கள் கட்டணம் செலுத்தியவுடன் விரைவுக்குறியீடு மற்றும் சார்பதிவாளரின் மின்கையொப்பமிட்ட பயனரின் உள்நுழைவுக்கு வில்லங்கசான்று அனுப்பி வைக்கப்படுகிறது. இத்திட்டமானது துவக்கி வைத்த தேதியான கடந்தாண்டு டிசம்பர் 10 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை பெறப்பட்ட 18,34,702 வில்லங்கச்சான்று விண்ணப்பங்களில் 18,18,783 இனங்களில் வில்லங்கசான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, 99.13 சதவீத வில்லங்கச்சான்றுகள் பயனருக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் வந்து கணினிமயமாக்கப்பட்ட காலத்திற்கு விண்ணப்பித்து வில்லங்கச்சான்றை நேரில் பெற்றுச்செல்லும் திட்டமோ இதற்காக தனியாக பணியாளர்களை நியமிக்கும் திட்டமே பதிவுத்துறையின் பரிசீலனையில் இல்லை. இது குறித்து ஆலோசனை இவ்வலுவலகத்தில் நடைபெறவில்லை.

Related Stories: