முரசொலி அலுவலக விவகாரம்: ஆதாரத்துடன் ராமதாஸ் நிரூபிப்பாரா?... கனிமொழி எம்பி கேள்வி

சென்னை: முரசொலி அலுவலக விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன் ராமதாஸ் பேசட்டும், ஆதாரம் இல்லாமல் பேச கூடாது என்று கனிமொழி கூறினார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி நிருபர்களுக்கு, அளித்த பேட்டி:  சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், செர்பியா நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்று வந்தோம். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று ராமதாஸ் கூறியிருப்பது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவர் கூறியதில் உண்மை இருந்தால், ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்.

ஆதாரத்தோடு பேசட்டும். ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. முரசொலி, எப்போது உருவாக்கப்பட்டது, எப்படி உருவாக்கப்பட்டது, தலைவர் கலைஞரின் உழைப்பு எவ்வாறு இருந்தது, எந்தளவுக்கு உழைத்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். எனவே இதுபற்றி நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் அனைவருக்கும் இது தெளிவாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: