×

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்ய தனிக்குழு

சென்னை: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைவைத்து விற்பனை செய்வதை தடுக்க தனிக்குழு ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் அமைத்துள்ளது. டாஸ்மாக் கடைகள் விற்பனைக்கு ஏற்றவாறு ஏ,பி,சி என தரம்பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ₹1 லட்சம் முதல் ₹6 லட்சம் வரையில் நாள்தோறும் இந்த கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. மொத்தமாக நாள் ஒன்றுக்கு டாஸ்மாக் கடைகளின் மூலம் ₹85 முதல் ₹95 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. இந்தநிலையில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக விடுமுறை தினங்களில் அதிக அளவு விற்பனை நடைபெறுவது வழக்கம்.இதேபோல், சாதாரண நாட்களில் மதுபானங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட ₹20 முதல் ₹50 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, ஊழியர்கள் கூடுதல் விலைவைத்து விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் கூடுதல் விலைவைத்து விற்பனை செய்வதை தடுக்க தனிக்குழு ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் அமைத்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதை தடுக்க சிறப்பு தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவும், பார்களை ஆய்வு செய்ய ஒரு குழுவும் என இரண்டு குழுக்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு குழு மட்டுமே இருந்தது. இந்த குழு கடைகளையும், பார்களையும் சேர்த்து ஆய்வு செய்தது.
இதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் கடை மற்றும் பார்களை தனித்தனியாக ஆய்வு செய்ய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு திடீர் ஆய்வை மேற்கொண்டு கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கும். மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான இந்த குழுவில் 3 முதல் 5 பேர் வரையில் இடம்பெற்றிருப்பார்கள்.இவ்வாறு கூறினார்.

Tags : Task Force ,Diwali Diwali on Task Force , Task,Force , Diwali
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...