மாநில அளவிலான சிலம்பம்: 8வது முறையாக திருவள்ளூர் சாம்பியன்

திருவள்ளூர்: தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி திருநெல்வேலி நகரில் நடந்தது. இதில் ஜூனியர், சூப்பர் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான  பிரிவில், திருவள்ளூர் மாவட்டம் 79 புள்ளிகள் பெற்று முதலிடம்  பிடித்ததுடன், இந்தப் போட்டியின்  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும்  வென்றது.  திருவள்ளூர் மாவட்டம் தொடர்ந்து 8வது முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Advertising
Advertising

இந்தப் போட்டியில் 45 புள்ளிகள் பெற்று சென்னை மாவட்டம் 2வது இடத்தையும், 15 புள்ளிகள் பெற்று திருநெல்வேலி மாவட்டம் 3வது இடமும் பிடித்தன.மாநில   அளவில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றதற்காக, திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்டக்  கழக  நிர்வாகிகள்  ஏ.பாஸ்கரன், முருககனி,  ராஜா மற்றும்  சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள் ஆகியோருக்கு மாநில தலைவர்  மு.ராஜேந்திரன் பாராட்டுகளை தெரிவித்தார்.

Related Stories: