மாவட்ட அளவிலான செஸ்: அரசு பள்ளி ஆதித்யா முதலிடம்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு அடுத்துள்ள காட்டாங்கொளத்தூர் தனியார் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில்  காஞ்சிபுரம் மாவட்ட அளவில்  பள்ளி மாணவ, மாணவியருக்கான சதுரங்க போட்டி  நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கல்வி   அலுவலர் பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட 288 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் யு19 மாணவர்கள் பிரிவில் குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி மாணவன் ஆதித்யா, வியாசா மெட்ரிக் பள்ளி மாணவி சிந்துஜா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.  

Advertising
Advertising

மேலும் யு17 பிரிவில் ஆர்.ரத்னீஷ், ஆர்.சுவர்ணா, யு14 பிரிவில் ரிஷித் பிரசன்னா ஆகியோர் முதலிடங்களை பெற்றனர்.இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட சார்பில் விரைவில் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.  சிவானந்தா  குருகுலம் செயலாளர் ராஜாராம், மங்கலம் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர் குமார் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர்.

Related Stories: