கேடிஎம் 790 அட்வென்ச்சர் அறிமுகம்

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் மற்றும் ஆர்சி வரிசை மாடல்களுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், கேடிஎம் நிறுவனத்தின் சாகச பயண வகையை சேர்ந்த அட்வென்ச்சர் வரிசை மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. அந்த வகையில், கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அதன் சக்திவாய்ந்த 790 அட்வென்ச்சர் மாடலானது அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் அடிப்படையிலான சாகச பயணத்திற்கான சிறப்பம்சங்களுடன் மாறுதல்கள் செய்யப்பட்ட மாடலாக 790 அட்வென்ச்சர் இருக்கும். கேடிஎம் 790 ட்யூக் பைக் போட்டியாளர்களைவிட விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கு ஈடான தொழில்நுட்ப அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது. மேலும், கேடிஎம் 790 ட்யூக் பைக்கைவிட அதன் அட்வென்ச்சர் மாடலின் விலையானது 20% வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால், ₹10 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கில் 799 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 94 எச்பி பவரையும், 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் முன்புறத்தில் 21 அங்குல சக்கரம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 48 மிமீ லாங் டிரால் போர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று, முன்புறத்தில் 320 மிமீ விட்டமுடைய டியூவல் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 260 மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. 189 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில், 20 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 263 மிமீ ஆக உள்ளது. இருக்கை உயரம், 880 மி.மீ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கேடிஎம் 790 அட்வென்ச்சர் ஆர் என்ற அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

Related Stories: