மைதா போளி

செய்முறை : முதலில் மைதா மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். பின்னர் அதன் மீது நல்லெண்ணெயை தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும். வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரை சேர்த்து, கொதித்ததும் வடிகட்டவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து லேசாக கொதித்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும். தோசைக்கல் சூடானதும் வாழை இலையில் நெய் தடவி, அதில் சிறிய மாவு உருண்டையை வைத்து தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் வாழை இலையில் நெய் தடவி சப்பாத்தி போல விரல்களால் நீவவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் பிரட்டி போட்டு எடுக்கவும்.

தீபாவளி அன்று காலையில் செய்வதற்கு ஏற்ற பலகாரமிது.
Advertising
Advertising

Related Stories: