தேங்காய் பால் முறுக்கு

செய்முறை : தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி கெ ட்டியான தேங்காய் பாலாக எடுக்கவும். மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன் வெண்ணெயை சேர்த்து மாவை நன்கு பிசையவும். மாவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும். பின்னர் ஈரத்துணி மீது முறுக்காக பிழிந்து, காய்ந்த எண்ணெயில் போட்டு எடுக்கவும். பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். நல்ல மணமாக இருக்கும். கூடுதல் மணம் தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.மிருதுவான, சுவையான தேங்காய் பால் முறுக்கு ரெடி.

Advertising
Advertising

Related Stories: