தீபாவளிக்கு சொந்த ஊர் வந்து செல்ல வசதியாக குமரியில் இருந்து 286 சிறப்பு பஸ்கள் இயக்கம் :மதுரைக்கு ஏ.சி. பஸ் இயங்க தொடங்கியது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு ஏ.சி. பஸ் இயங்க தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இது தவிர தீபாவளி சிறப்பு பஸ்கள் விவரங்களையும் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியையொட்டி வெளியூர்களில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.  அதன்படி நாகர்கோவிலில் இருந்து 24ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

24ம் தேதி சென்னைக்கு 4 பஸ்களும், மதுரைக்கு 10 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 25ம் தேதி, சென்னைக்கு 36 பஸ்களும், மதுரைக்கு 50 பஸ்களும், கோவைக்கு 15 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 26ம் தேதி (சனி) சென்னைக்கு 16 பஸ்களும்,  மதுரைக்கு 29 பஸ்களும், கோவைக்கு 10 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதே போல் தீபாவளி முடிந்து ஊருக்கு செல்ல வசதியாக 27ம் தேதி  சென்னைக்கு 5 பஸ்களும், மதுரைக்கு 10 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 28ம்தேதி ெசன்னைக்கு 22  பஸ்களும், மதுரைக்கு 26 பஸ்களும் கோவைக்கு 12 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

29ம் தேதி, சென்னைக்கு 5 பஸ்களும், மதுரைக்கு 10 பஸ்களும், கோவைக்கு 5 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 30ம்தேதி, சென்னைக்கு 5, மதுரைக்கு 6 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன வசதி ெகாண்ட பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. சென்னை, கோவை, சேலம் போன்ற மாநகரங்களில் இயங்கி வந்த குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள்,  தற்போது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் வந்துள்ளன. அதன்படி நாகர்கோவில் மண்டலத்துக்கு 6 ஏ.சி. பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் ஒரே ஒரு பஸ் தற்போது வழங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நாகர்கோவில் -  மதுரை இடையே இயக்கப்பட உள்ளது.  

காலை 9 மணி  மற்றும் இரவு 9 மணிக்கு நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ் புறப்படும். அதன்படி இன்று காலை 9மணிக்கு இந்த பஸ் இயக்கப்பட்டது. மதுரைக்கான கட்டணம்  ரூ.270 ஆகும். சாதாரண பஸ்களில் ரூ.220 கட்டணம் ஆகும்.

குளிர் சாதன வசதி கொண்ட பஸ் என்பதால், பயணிகள் அதிக ஆர்வத்துடன் பயணித்தனர். இதே போல் இனி வரக்கூடிய பஸ்கள் கோவை, தேனி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: