இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். விக்கிரவாண்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி தொகுதியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: