சென்னை முரசொலி அலுவலக விவகாரத்தில் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால்

சென்னை: சென்னையில் முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் கூறியது பச்சைப்பொய் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி அலுவலகத்தின் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தை காட்டிட நான் தயாராக இருக்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். பஞ்சமி நிலம் என்ற புகாரை நிரூபிக்க தவறினால், ராமதாசும் அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயாரா என்று அறைகூவல் விடுத்திருந்தேன். நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் எனது அறைகூவலை ஏற்று நிலம் ஆதாரத்தை ராமதாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவகாரத்தை திசை திருப்பாமல் அறைகூவலை ராமதாஸ் ஏற்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் அளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: