×

தீபாவளி பண்டிகை எதிரொலி: ஆத்தூர் ஆட்டுச் சந்தையில், 4 கோடி ரூபாய்க்கு விற்பனை

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி ஆத்தூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 4 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து  துணி, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த வீரகனூரில் சனிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது.

தீபாவளியை முன்னிட்டு சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் மற்றும் மாடுகளை விற்பனை செய்ய ஏராளமானோர் குவிந்தனர். அங்கு பண்டிகை வருவதால் ரூபாய் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள்  தெரிவித்தனர். இதேபோல், கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையும் களைக்கட்டியது. புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த சந்தையில் குறைந்தபட்சம் ஒரு ஆட்டின் விலை ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஒரு மாத இடைவேளைக்கு பின் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு  ஆடுகள் விற்பனையானதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags : Atur Goat Market , Diwali Echoes: Atur Goat Market, Sale for Rs 4 crore
× RELATED தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100...