திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த 470 சவரன் நகைகளை உருக்கி விற்றதாக கணேசன் வாக்குமூலம்!

திருச்சி: திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சுற்றுலா வாகனம் மதுரை வாடிப்பட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 28ம் தேதி திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 சவரன் நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் இந்த மாதம் 2ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட, முருகன், சுரேஷ், மணிகண்டன், கணேசன், கனகவல்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய மூளையாக செயல்பட்ட முருகன் வேறொரு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்தி வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், லலிதா ஜுவல்லரியில் திருடிய நகைகளை திருச்சி காவிரி ஆற்றங்கரையோரம் பதுக்கி வைத்திருந்ததை பெங்களூரு போலீசார் கைப்பற்றினர். சுமார் 11 கிலோ நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் முருகனின் கூட்டாளியான கணேசனிடம் நடத்தி வந்த விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அதில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த கும்பல் இவர்களை தான் என்பதும் அம்பலமானது. இதையடுத்து சமயபுரம் போலீசார் கணேசனை ஒரு வாரகாலம் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கணேசன், முருகன் ஆகியோர்க்கு வங்கி கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபடும் போது வேன் ஒன்றை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. சமயநல்லூர் வாடிப்பட்டி அருகே வேன் ஓட்டுநராக கணேசன் செய்யப்பட்டு வந்துள்ளான். இதையடுத்து அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வேனில் கேஸ் சிலிண்டர், எடை போடும் மெசின் ஆகியவை இருப்பதாக வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: