×

தெலுங்கானாவில் மாநில அளவில் இன்று முழு அடைப்பு : ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் முழு அடைப்பில் பங்கேற்றுள்ளதால் போக்குவரத்து முடக்கம்

ஹைதராபாத் : தெலுங்கானாவில் மாநில அளவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை அடுத்து இன்று பந்த்- க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களின்அழைப்பை ஏற்று டி.ஆர்.எஸ் தவிர மற்ற அனைத்து கட்சியினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் மாநில தழுவிய பந்த்- ற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களும் ஆதரவு தெரிவித்து முழு அடைப்பில் பங்கேற்றுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் நடத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகளை இயக்கவிடாமல் தடுத்து வருவதாக மாநிலம் முழுவதும்  உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்களை போலீசார்  கைது செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே டிஸ்மிஸ் செய்யப்பட்ட 48,000 ஊழியர்களுடன் பேச்சு நடத்தி பிரச்னையை சுமக்க தீர்வு காண வேண்டும் என தெலுங்கானா மாநில அரசிற்கு தெலுங்கானா  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : State ,Telangana ,state shutdown ,taxi drivers , Telangana, full blockage, traffic, strike, bandh, indefinite
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து