×

சொல்லிட்டாங்க...

இப்போது கூட நாட்டின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியுடனேயே இருக்கிறது. புள்ளி விவரங்களை ஆராய்ந்து கொண்டிருக்க விரும்பவில்லை.  - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டுமே தவிர, சொந்த விருப்பு வெறுப்பின்படி செயல்பட முடியாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுக ஏராளமான பணத்தை கொடுத்துள்ளது. ஆனால் அதிகாரிகள் நாங்கள் பணம் கொடுத்ததாக கூறுகின்றனர். எங்களிடம் பணம் எங்கே இருக்கிறது? இது ஆளும்கட்சியின் சூழ்ச்சி. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி.


Tags : Central ,Nirmala Sitharaman , Central Finance Minister ,Nirmala Sitharaman
× RELATED மத்திய பாஜக அரசின் சாதனையை மக்களிடம்...