×

சிறுபான்மையினர் பல்வேறு கடன் திட்டங்கள் பெற சென்னையில் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:  தமிழக பிற்படுத்தப்பட்டோர்  பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ஆண்டுதோறும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு  கடன் திட்டங்களின்   மூலம்    கடன்  வழங்கப்பட்டு  வருகிறது. அதன்படி, 2019-20ம் ஆண்டிற்கு சென்னை மாவட்டத்திற்கு 1 கோடி அளவில்  இலக்கு நிர்ணயிக்கப்பட்டு டாப்செட்கோ மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல், தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு  கடன்    திட்டங்கள்   மூலம்    கடன்  வழங்கப்படுகிறது.   2019-20ம் ஆண்டிற்கு சென்னை மாவட்டத்திற்கு ₹3 கோடி அளவில்  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு மிகாமலும், பயனடைவோரின் வயது வரம்பு 18 வயது முதல் 60 வயது வரையிலும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சிறு தொழில் கடன் திட்டம்,  கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1,20,000 மிகாமல் இருக்க வேண்டும். இந்த கடன் திட்டங்கள் மூலம் கடன்  பெற சிறப்பு முகாம்கள் மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 23ம் தேதியும், புரசைவாக்கத்தில் 25ம் தேதியும், அயனாவரத்தில் 30ம் தேதியும், சோழிங்கநல்லூரில் நவம்பர் 1ம் தேதியும், அமைந்தகரையில் 6ம் தேதியும், கிண்டியில் 8ம் தேதியும், பெரம்பூரில் 13ம் தேதியும், அம்பத்தூரில் 15ம் தேதியும், மாதவரத்தில் 20ம் தேதியும், மதுரவாயலில் 22ம் தேதியும், மாம்பலத்தில் டிசம்பர் 4ம் தேதியும், தண்டையார்பேட்டையில் 6ம் தேதியும், ஆலந்தூரில் 11ம் தேதியும், திருவொற்றியூரில் 13ம் தேதியும், எழும்பூரில்    18ம் தேதியும், வேளச்சேரியில் 20ம் தேதியும் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

எனவே,  சென்னை  மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்கள் (கிறிஸ்தவ, இஸ்லாமியர், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை  பெற்று,  அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது   பள்ளி மாற்று சான்றிதழ்,   உண்மை சான்றிதழ்,  கல்வி கட்டணம் செலுத்திய ரசீது சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Special Camps ,Chennai ,Minorities , Minorities, Loan Schemes, Special Camps, Collector
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...