9 நாள் மோதலுக்குப் பின் திருப்பம் துருக்கி - சிரியா படைகள் 5 நாட்கள் போர் நிறுத்தம்: அமெரிக்கா நடத்திய பேச்சில் உடன்பாடு

ஹாமிஸ்லி: ஒன்பது நாட்கள் நடைபெற்ற மோதலுக்கு பின் துருக்கி போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. குர்தீஷ்கள் தலைமையிலான சிரிய ஜனநாயக படையும் அதை பின்பற்ற முடிவு செய்துள்து.  துருக்கி எல்லையில் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்தீஷ்கள் மீது கடந்த 9ம் தேதி முதல் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 12க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 3 லட்சம் குர்தீஷ் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், 9 நாட்கள் தாக்குதலுக்கு பின் துருக்கி 5 நாள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. குர்தீஷ் படை அங்கிருந்து வாபஸ் பெறுவதற்காக 5 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக அது தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகனுடன் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த போர் நிறுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

துருக்கியின் போர் நிறுத்தத்தை பின்பற்றி தாங்களும் போர் நிறுத்தம் செய்வதாக  குர்தீஷ் தலைமையிலான சிரியா ஜனநாயக படையும் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக அந்த படையின் தலைவர் மஸ்லும் அப்தி கூறுகையில், ‘‘துருக்கி போர் நிறுத்தம் அறிவித்துள்ளதால் நாங்களும் ராஸ் அல் அய்ன் முதல் டேல் அப்யாடு வரையிலான பகுதியில் 5 நாட்கள் ேபார் நிறுத்தம் செய்ய முடிவு ெசய்துள்ளோம். மற்ற பகுதியில் போர் நிறுத்தம் செய்வது பற்றி ஆலோசிக்கவில்லை,’’ என்றார்.

ரொம்ப ரொம்ப நன்றி:

துருக்கியின் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ள துருக்கி அதிபர் எர்டோகனை பாராட்டுகிறேன். அவர் எனது நண்பர். சிரியாவில் ஏராளமான தீவிரவாதிகள் உள்ளனர். அவர்களால் துருக்கியில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. தற்போது போர் நிறுத்தம் செய்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. இதனால், துருக்கி மீது இனிமேல் பொருளாதார தடை விதிக்க தேவையில்லை என கருதுகிறேன். போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள குர்தீஷ்களுக்கும் எனது நன்றி,’’ என்றார்.

Related Stories: