×

விளையாட்டு துளிகள்

* விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரில் நாளை நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் கர்நாடகா - புதுச்சேரி, டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெற உள்ள கால் இறுதி ஆட்டங்களில் பஞ்சாப் - தமிழகம், சத்தீஸ்கர் - மும்பை அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
* ஆசிய மைதானங்களில் தொடர்ச்சியாக 9 முறை டாசில் தோற்றுள்ளதால் தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளெஸ்ஸி ராஞ்சியில் இன்று வேறு ஒரு வீரரை டாஸ் போட அனுப்புவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
* இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே இன்று தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியை நட்சத்திர வீரர் எம்.எஸ்.டோனி நேரில் பார்த்து ரசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக டோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் சார்பில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* ஒடிஷாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஹாக்கி போட்டிகளுக்கான (நவ. 1, 2) இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளின் கேப்டனாக மன்பிரீத் சிங், ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை கேப்டன்களாக எஸ்.வி.சுனில், சவீதா செயல்பட உள்ளனர். ஆண்கள் அணி ரஷ்யாவையும், மகளிர் அணி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.
* சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 3-3 என்ற கோல் கணக்கில் நேற்று இங்கிலாந்துடன் டிரா செய்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இதே அணிகள் மீண்டும் மோதுகின்றன.
* ராஞ்சி போட்டிக்கான இந்திய அணியில், காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஸ்பின்னர் குல்தீப் யாதவுக்கு பதிலாக ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
* டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் போட்டிகளில் அசார் அலி, டி20 போட்டிகளில் பாபர் ஆஸம் கேப்டன்களாக இருப்பார்கள் என பிசிபி நேற்று அறிவித்துள்ளது.

Tags : Drops. , Vijay Hazare Trophy
× RELATED முதியோர் இல்லத்திற்கு உணவு பொருட்கள்