×

ரிலையன்ஸ் பங்கு மதிப்பு 9 லட்சம் கோடியை தாண்டியது

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவன பங்கு மதிப்பு 9 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 9,01,490.09 கோடியாக இருந்தது. இதன்மூலம் பங்குகளின் மூலதன மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பெற்றுள்ளது. நேற்று மாலை இந்த நிறுவனம் வருவாய் புள்ளி விவரங்களை வெளியிட்டது.

இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் இதன் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வந்தது.நேற்று சந்தையில் இந்த நிறுவன பங்கு மதிப்பு 2.28 சதவீதம் உயர்ந்து 1,428 என்ற உச்சத்தை தொட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், பங்குகளின் சந்தை மதிப்பு ₹8 லட்சம் கோடி என்ற இலக்கை தாண்டி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Reliance , Reliance stock
× RELATED கடன் இல்லாத நிறுவனமாக மாறியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்