சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதிப்பு

வாஷிங்டன்: சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத் துடனும் அமெரிக்கா வர்த்தகப் போரை துவங்கியுள்ளது.ஏர்பஸ் தயாரிப்புக்களுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகள் சட்ட விரோதமாக மானியம் வழங்கி வருவதாக கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனை ெதாடர்ந்து ஒரு ஆண்டுகள் கழிந்து போயிங் நிறுவனம் 1989ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அமெரிக்க அரசின் பல்வேறு கிளைகளில் இருந்து சட்ட விரோதமாக மானியம் பெற்று வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறி வருகின்றது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் -அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்த மோதலின் ஒரு கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து வந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரி்க்கா நேற்று அதிகளவில்  வரி விதித்தது. இது, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதில் ஏர் பஸ் விமானங்கள், ஸ்காட்ச் விஸ்கி, பிரெஞ்ச் ஒயின் ஆகியவற்றுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரான்ஸ் பொருளாதார துறை அமைச்சர் ப்ரூனோ லி கூறுகையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது கடுமையான விளைவுகளை கொண்டுவரும்” என்றார். ஏற்கனவே அமெரிக்கா -சீனா இடையே வர்த்தகப் போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலும் தற்போது வர்த்தகப் போர் மூண்டுள்ளது. இது, உலகளவில் ெபரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>