அமெரிக்காவில் நிலநடுக்கம் பற்றி எச்சரிக்கும் மொபைல் ஆப்

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கும் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.‘மைஷேக்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பை, கலிபோர்னியா பல்கலைக் கழகம் வடிவமைத்து உள்ளது. சமீபத்தில் இதன் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியாவில் 4.5 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் 2 நில அதிர்வுகள் ஏற்பட்டன. இவற்றை முறையே 2.1 மற்றும் 1.6 நிமிடங்களுக்கு முன்பாக மொபைல் ஆப் எச்சரிக்கை செய்தது. இன்னும் முன்கூட்டி எச்சரிக்கை செய்யும் விதத்தில் ஆப் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: