ரயில்வே காவலர் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

சென்னை:  ரயில்வே காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு பெறுவது குறித்த வழிகாட்டு முகாம் எழும்பூரில் உள்ள ரயில்வே கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமை வகித்தார். ரயில்வே ஐஜி வனிதா வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி உரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில், திருச்சி ரயில்வே எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், சென்னை எஸ்.பி மகேஸ்வரன், பாதுகாப்பு துறை(ராணுவம்) லெபினன்ட் கர்ணல் சுபலேசன், வித்யா பத்ரிநாத் ஆகியோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். 5 மென்பொருள் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டது. வேலைவாய்ப்பு முகாமில் காவலர்களின் வாரிசுகள் 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: