×

7 தமிழர் விடுதலை நிராகரிப்பு விவகாரம் முதல்வர் மக்களுக்கு உடனே விளக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “7 தமிழர் விடுதலை நிராகரிப்பு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு உடனே விளக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி அரசியலை விட்டு விலக தயாரா? : மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அரசியலை விட்டு விலக தயாரா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவர் ராமதாஸ், தற்போது “முரசொலி“ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.

அது பஞ்சமி நிலமே அல்ல; வழிவழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டாமனை. நான் சொல்வது பொய். அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும் அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.



Tags : Chief Minister ,Liberation ,LTTE , 7 Tamil, Rejection of Liberation
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....