7 தமிழர்கள் விடுதலை விவகாரம் சொந்த விருப்பு வெறுப்பின்படி ஆளுநர் செயல்பட முடியாது : ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆளுநரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும்.

Advertising
Advertising

இந்த முடிவை ஆளுநர் எழுத்து மூலம் தமிழக அரசுக்கு தெரிவித்தால், தமிழக அமைச்சரவை மீண்டும் கூடி ஏழு தமிழர்களை விடுவிக்க பரிந்துரைக்கும் தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடியும். அவ்வாறு  அனுப்பினால் அதை ஏற்று 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆணையிடுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. ஆளுநராக இருப்பவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டுமே தவிர, சொந்த விருப்பு வெறுப்பின்படி செயல்பட முடியாது.

Related Stories: