வைகோ வலியுறுத்தல் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும்

மதுரை: விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பது தொடர்பாக மதுரையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் அமர்வின் கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற  மதிமுக தலைவர் வைகோ, நிருபர்களிடம் கூறும்போது ‘‘விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட வேண்டும். தடையின் அடித்தளம் தகர்ந்து விட்டது. 7 தமிழர்கள் விடுதலை செய்யப்படாதது மனிதாபிமானமற்ற செயல். அவர்கள் 26 ஆண்டுகள் சிறையில் தவறு செய்யாமலே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்பாயத்தில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக நீதிபதி உறுதியளித்துள்ளார். நாடு கடந்த உறுப்பினர்களும் தீர்ப்பாயத்திற்கு வருகை தந்துள்ளனர். 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக மாநில அரசு அழுத்தம் தர வேண்டும்’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: