தமிழிலும் ஒரு படம் தயாரித்த கொள்ளையன் சென்னையில் 70 இடங்களில் முருகன் கைவரிசை

திருச்சி: திருச்சி நகைக்கடையில் கடந்த 2ம் தேதி சுவரில் துளை போட்டு ₹13 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் திருவாரூர் முருகன், அவரது கூட்டாளி மணிகண்டன், சுரேஷ், அவர்களுக்கு உதவிய ராதாகிருஷ்ணன், கனகவள்ளி என 6 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். இந்த கும்பலுக்கு ஆந்திரா, கர்நாடகா, சென்னை ஆகிய இடங்களில் நடந்த கொள்ளைகளில் தொடர்பு உள்ளதும், திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. பெங்களூரு சிறையிலடைக்கப்பட்ட முருகனை பெங்களூரு போலீசார், 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். திருச்சிக்கு அழைத்து வந்து காட்டு பகுதிகளில் புதைக்கப்பட்டு இருந்த 12 கிலோ நகைகளை மீட்டனர். விசாரணையில், கொள்ளையடித்த நகையை பிரபல தமிழ் நடிகைக்கு  பரிசாக முருகன் வழங்கியதாகவும், சென்னையில் பல நடிகைகளுடன் ஜாலியாக இருந்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து, பெங்களூரு போலீசார் நேற்று மாலை முருகனை சென்னைக்கு அழைத்து வந்து 2வது நாளாக நேற்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதில் முருகன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு: பெங்களூர், சென்னை பகுதிகளில் அதிக இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளேன். புழல் மற்றும் திருச்சி சிறையில் இருந்தபோது திட்டம் தீட்டினேன். கொள்ளையில் ஈடுபடுத்த 7 பேர் கும்பலை தயார்படுத்தினேன். தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டோம். கொள்ளையடித்த பணத்தில் ெசாகுசாக வலம் வந்தோம். மேலும் அந்த பணத்தில் ஏற்கனவே 2 தெலுங்கு படம் எடுத்ேதன். அப்போது தெலுங்கு நடிகைகளுடன் நானும், கூட்டாளிகளும் உல்லாசமாக இருந்தோம். படத்தில் நடித்த நடிகைக்கு பணம் தராததால் வழக்கு தொடர்ந்தனர். இதனால், படம் நின்றது.

படத்தை மீண்டும் தயாரிக்க திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தோம். அதில், சென்னை வந்து தமிழ் படம் எடுத்தேன். அந்த நடிகைளுடன் உல்லாசம் அனுபவித்தோம். சென்னையில் மட்டும் அண்ணாநகர், அமைந்தகரை உள்பட 70 இடங்களில் கைவரிசை காட்டியுள்ளேன். போலீசில் சிக்காமல் இருக்க சென்னை மாநகர இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ₹30 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளேன். இவ்வாறு முருகன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதைத்தொடர்ந்து சென்னையில் எங்கெங்கு கொள்ளையில் ஈடுபட்டார், கொள்ளையடித்த பணம், நகைகளை எங்கு வைத்துள்ளார் என பெங்களூரு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன்பின், மீண்டும் திருச்சிக்கு, பெங்களூரு போலீசார் அழைத்து வந்து விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி-பெங்களூரு போலீசுக்கு மோதலா?

திருச்சி நகை கொள்ளை வழக்கில் விசாரிக்க வந்த பெங்களூரு போலீசாருக்கு திருச்சி போலீசார் சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் முருகனின் இதுவரை கொள்ளையடித்த நகைகள், பணத்தை எங்கு வைத்துள்ளார் என்பதை விசாரிப்பதில் தாமதமும், சிரமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: