×

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 246 புள்ளிகள், நிஃப்டி 75 புள்ளிகள் உயர்வு

மும்பை: பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 246.32 புள்ளிகள் உயர்ந்து 39298.38 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 75.50 புள்ளிகள் உயர்ந்து 11661.85 புள்ளிகளாக உள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் 54.03, ஹெச்டிஎப்சி பேங்க் 29.75, டிசிஎஸ் 25.73, லார்சென் 24.32, மாருதி சுசூகி 21.46 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டன. ஐசிஐசிஐ பேங்க் 14.64, இன்போசிஸ் 3.95, பாரதி ஏர்டெல் 3.11, பஜாஜ் ஆட்டோ 2.52, டாடா மோட்டார்ஸ் 2.37 புள்ளிகள் வரை சரிந்தது.

தேசிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் 14.63, ஹெச்டிஎப்சி பேங்க் 8.33, நெஸ்ட்லே 6.50, டிசிஎஸ் 6.28, லார்சென் 6.26 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஐசிஐசிஐ பேங்க் 3.82, ஜீ என்டர்டைன் 2.89, பஜாஜ் பின்செர்வ் 1.71, டாடா மோட்டார்ஸ் 1.62, ஐஓசி 1.59 புள்ளிகள் வரை சரிந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.3,668க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.49.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Nifty , Stock
× RELATED தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்...