×

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குகள் உண்மை; திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்; மு.க.ஸ்டாலின் பேச்சு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஏழுசெம்பொன் கிராமத்தில் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார். மக்களின் அடிப்படை பிரச்னைகளை கூட தெரியாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விக்கிரவாண்டியில் திமுக சார்பில் நா.புகழேந்தியும், அதிமுக சார்பில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும் நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும் போட்டியிடுகின்றனர். சீமான்  தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.இரு தொகுதிகளிலும் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் தற்போது அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் ஏற்கனவே முதல்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

2ம் கட்ட பிரசாரத்தை கடந்த 13ம் தேதி விக்கிரவாண்டியில் துவக்கினார். வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து 2 நாள் பிரசாரம் செய்த அவர், கடந்த 2 நாட்களாக நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து இன்றும், நாளையும்  விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குகள் உண்மை, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.


Tags : election ,DMK ,MK Stalin ,speech ,Nanguneri ,Vikravandi ,campaign ,candidate ,Prachandi , Vikravandi, Nanguneri, DMK candidate, Prachandi, DMK leader, MK Stalin, campaign, by-election
× RELATED தேர்தல் நெருங்குவதையொட்டி திமுக...