தீபாவளிக்கு டிரஸ் வாங்கிட்டீங்களா?

ஷாப்பிங் ஒரு சுகமான அனுபவம். அதிலும் பண்டிகை சீசனில் ஷாப்பிங் செல்வது மிக உற்சாகத்தை அளிக்கக்கூடியது. கொட்டிக்கிடக்கும் ஆடை ரகங்கள், எதை எடுப்பது என்று திணறடிக்கும். ஷாப்பிங் செய்ய பொறுமை தேவை. கடை கடையாக ஏறி இறங்கினாலும், தேவையானதை தேர்வு செய்து வாங்கினால்தான் 100 சதவீதம்  நிறைவான  ஷாப்பிங்கின் திருப்தி கிடைக்கும். மகிழ்ச்சியாக ஷாப்பிங் சென்றாலே, மிக எளிதாக முடித்து விடலாம். சில ஷாப்பிங் டிப்ஸ்கள் இதோ: ஷாப்பிங் செல்வதற்கு முன்னர் நீங்கள் வாங்க வேண்டிய அல்லது வாங்க விரும்பும் பொருள்களை பட்டியல் போட்டு எடுத்துச் செல்லுங்கள். இது நேரத்தை குறைக்க உதவும். சில சமயங்களில் வாங்க வேண்டியதைத் தவிர மற்ற பொருள்களை வாங்கி பணம் காலியாகிவிடுவதை தவிர்க்கலாம். இல்லையென்றால் வாங்க திட்டமிட்ட சில பொருட்களை வாங்கமுடியாமல் செல்லும் நிலை ஏற்படலாம். செலவழிக்கும் பணம் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம், நீங்கள் செலவழிக்கும் நேரம் மிகவும் உன்னதமானது. எனவே அவற்றை வீணாக்கமால் இருக்க ஷாப்பிங் செல்வதற்கு முன் பட்டியலிட்டு செல்லுவது சிறந்தது.

Advertising
Advertising

அதேபோன்று “பட்ஜெட்” போடுவதும் சிறந்த ஷாப்பிங்கிற்கு தேவையானவற்றுள் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் பணம் வீணாவது தவிர்க்கப்படும். கண்ணில் பார்த்தவற்றை எல்லாம் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தவிர்த்து தேவையானவற்றை வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம். ஷாப்பிங் சென்று வந்த பின்னர் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதும் தவிர்க்கப்படும். மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களை ஷாப்பிங்குக்காக தேர்ந்தெடுங்கள். விசேஷ நாட்களில்  கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள். கூட்டம் அதிகமாக மொய்க்க ஆரம்பித்து, நின்று நிதானித்து தேர்வு செய்ய வசதியில்லாமல் செய்துவிடும். எதையும் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கி முடிக்க முயற்சிசெய்யுங்கள். தேவையில்லாமல் பட்டியலில் இல்லாத பொருட்களை எல்லாம் பார்க்கும் எண்ணத்தை தவிர்த்து எதை வாங்குவதற்காக சென்றீர்களோ அதை விற்பனை பிரதிநிதியிடம் கேளுங்கள்.

அவர்கள் அதில் பல வகைகளை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் இருந்து உங்களுக்கு தேவையானதை  தேர்வு செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் தேவையில்லாமல் நேரம் வீணாவதை தவிர்க்கலாம்.  சோர்வாக இருக்கும்போது ஷாப்பிங் செல்லாதீர்கள். இதுபோன்ற நேரத்தில் ஷாப்பிங் சென்றால் சரியான பொருட்களை தேர்வு செய்ய முடியாமல் சிரமம் அடைவீர்கள். எனவே ஷாப்பிங் கிளம்புவதற்கு முன்பு வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள். அதேபோல் நீங்கள் சரியான மூடில் இல்லாதபோதும், அப்செட்டாக இருக்கும்போதும் ஷாப்பிங் சென்றால் சரியாக பொருட்களை தேர்வு செய்யமுடியாது. இது தேவையானது தானா: ஷாப்பிங் சென்றால் கண்களில் பட்டதையெல்லாம் வாங்கி குவிக்காமல் ஒவ்வொரு பொருளையும் தேர்வுசெய்யும்போதும் இது நமக்கு தேவையானது தானா, மிகவும் அவசியமானதா என்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.  அப்போது அந்த பொருள் தேவையா என்பதை முடிவு செய்து விடலாம். இதன் மூலம் நேரம் வீணாவது தவிர்க்கப்படுவதோடு, பணமும் மிச்சமாகும்.  

கிரியாஸில் தீபாவளி சலுகை

இல்லத்தை மெருகூட்ட விரும்பும் ஒவ்வொருவரும் கிரியாஸுக்கு வருகை தரவேண்டிய சரியான தருணம் இது. தீபாவளி கொண்டாட்டங்களை மேலும் சிறப்பாக்க கிரியாஸ் பல்வேறு விழாக்கால சலுகைகளை அறிமுகப்படுத்துகிறது. தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் LED, TVக்கள், ACக்கள்  ரெப்ரிஜிரேட்டர்கள் மற்றும் வாஷிங் மெஷின்களை காட்சிபடுத்துவதோடு அவற்றின் மீது பணம் செலுத்தும் எளிய  வழிமுறைகளையும் மற்றும் தவனை முறை திட்டங்களுடன் விருப்பத்தேர்வுகளையும் அளிக்கிறது.

இதன் மூலம் தரமான பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்குடன் கிரியாஸ் களமிறங்கியுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களை எக்சேன்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 25% தள்ளுபடியும், மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ₹1500 கேஷ்பேக் சலுகைகளையும் பெற்று மகிழலாம். நீங்கள் வாங்கும் ஒவ்வொன்றுக்கும் இலவச பரிசுகள் 100% உறுதி. இந்த சலுகைகள் அக்டோபர் 31ம் தேதி வரை மட்டுமே.

Related Stories: