உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வரைபடத்தை கிழித்த முஸ்லிம் தரப்பு வக்கீல் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்: பார் கவுன்சிலில் இந்து மகாசபா புகார்

புதுடெல்லி: அயோத்தி நில வழக்கின் இறுதி கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அகில இந்திய இந்து மகாசபா சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங், ராமர் பிறந்த இடம் குறித்த வரைபடம்  ஒன்றையும், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என கூறும் புத்தகங்களையும் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சன்னி வக்பு வாரிய தரப்பு வக்கீல் ராஜீவ் தவான், ‘இது போன்ற ஆவணங்கள் குறித்து அலகாபாத்  உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டது. அதனால், இவற்றை ஏற்கக் கூடாது,’ என கூறினார். ‘இவற்றை ஏற்கும்படி நான் வலியுறுத்த மாட்டேன்,’ என விகாஸ் சிங்கும் கூறினார். அதன்பின், ‘இந்த வரைபடத்தை என்ன செய்யட்டும்?’  என நீதிபதிகளிடம் ராஜீவ் தவான் கேட்டார். இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், ‘நீங்கள் அதை  கிழித்தெறியலாம்,’ என்றனர்.

அதனால், ராஜீவ் தவான் அதை நீதிமன்ற அறையிலேயே கிழித்தெறிந்தார். பின்னர், மதியம் நடந்த விசாரணையின்போது, ‘நான் வரைபடத்தை கிழித்தெறிந்த விஷயம், எனது சொந்த முடிவு போல் நீதிமன்றத்துக்கு வெளியே வைரலாக  பரவுகிறது’ என நீதிபதிகளிடம் ராஜீவ் தவான் குறிப்பிட்டார். இதற்கு, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பார் கவுன்சிலுக்கு அகில இந்திய இந்து மகாசபா கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதில், ‘அயோத்தி வழக்கு விசாரணையில்  வக்கீல் ராஜீவ் தவான், வரைபடத்தை கிழித்தெறிந்தது மிக மோசமான செயல். இது உச்ச நீதிமன்ற வக்கீல் சங்கத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அவர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என  கூறியுள்ளது.இதற்டையே, சேம்பர் அமர்வில் ேநற்று இந்து மற்றும் முஸ்லீம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதங்கள் தொடர்பான ஆவணங்கள் மீது பரிசீலனை நடந்தது.

Related Stories: