இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் முடிந்து விடும்: முதல்வர் எடப்பாடி உறுதி

விக்கிரவாண்டி: இந்தாண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்  தமிழ்ச்செல்வனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3வது நாளாக நேற்று பிரசாரம் செய்தார். தொகுதிக்குட்பட்ட பனமலை, அன்னியூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில்  அவர் ேவன் பிரசாரம் செய்தார். அப்போது, முதல்வர் பழனிசாமி  பேசியதாவது:  இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அனைவரும் பதவி ஏற்றுக் கொள்வார்கள். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி  தேர்தல் நடத்த வேண்டும்.

அதனால்தான் காலதாமதம் ஆனது, தற்போது அவை முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதால், இடைத்தேர்தல் நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற்று முடிந்து விடும். இத்தொகுதியில் உள்ள நந்தன் கால்வாய்  திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப நீர் மேலாண்மை திட்டம் மூலம் நடவடிக்கை எடுத்து பணிகள்  முடிக்கப்படும். அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அரசாக உள்ளது. ஏழை மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி  உள்ளோம். அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் . இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags : elections ,Chief Minister , Local Elections, Chief Minister Edappadi
× RELATED உள்ளாட்சி தேர்தல் கோவை தி.மு.க.வில் ஒரே நாளில் 700 பேர் விருப்ப மனு தாக்கல்